பஞ்சுமிட்டாய் நிகழ்வு – உமா

பொதுவா நமக்கு வயசு குறையணும்னா 2 விஷயம் பண்ணலாம் 1 , எப்பவும் மகிழ்ச்சியா இருப்பது, 2, குழந்தை களுடன் இருப்பது. இவை இரண்டுலயுமே டக்னு நம்ம வயசு குறைவது நிச்சயம்.நேரங்களை பயனுள்ள வகையில் கழிப்பது, மிக முக்கியம் அந்த வகையில் திரு பிரபு அவர்கள் தங்கள் பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு, தமிழ் பாடல்களையும், நல்ல கருத்துள்ள கதைகளையும் கூற ஒரு அழகான நிகழ்ச்சியை நடத்துகிறார். அந்தக் குழந்தைகளுக்காகவே ஒரு புத்தகமும் வெளியாகிறது பஞ்சு மிட்டாய் என்ற பெயரில், அதில் குழந்தைகளின் கைவண்ணம் அசர வைக்கிறது.பொதுவா பெங்ளூர்ல தமிழ் பேசற குழந்தைகளின் நடுவில் இருப்பது சற்றே கடினம், அதுவும் காவேரிப் பிரச்சனை சமயத்தில் 40 குழந்தைகள் மத்தியில் இருந்தது பெரிய வரம். என் மொழி தெரிந்த குழந்தைகள் அனைவரும் .பெங்களூர்ல இப்படி ஒரு பகுதியா, வயல்வெளிகளைக் கடந்த அபார்ட்மென்ட்கள்.

DSC_7638.JPG
பாட்டு என்றால் உட்கார்ந்து கொண்டு, நின்று கொண்டு பாடுவது அல்ல, வரிக்கு வரி உணர்ந்து ஆடி, குதித்து மகிழ்வது.விதவிதமான பாடல்கள் | தவளை, யானை, மின்னல், மழை, நிறங்கள் எல்லாமே உடல்மொழியுடன் கூடிய ஆட்டம். வெகு நாட்களுக்குப் பிறகு குழந்தைகளுடன் நானும் வாய் விட்டுப் பாடி மகிழ்ந்தேன்.எத்தனையோ முறைகேட்ட கதை தான், ஆனால் ஒவ்வொரு குழந்தையின் மழலையிலும் மயங்கித்தான் போனோம் அனைவரும்.ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவெனில் தயக்கம் என்பதே இல்லாமல் குழந்தைகள் பேசியது.
ஏகப்பட்ட கதைகள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்
சிங்கம் வாலினால் ஓவியம் வரைந்து வாலின் நிறம் மாறிய கதை.
அடுத்தது நாம கேட்ட கோடாரி கதை தான் அதை மாற்றி நாடகமாக நடித்தார்கள், 100 வருஷத்துக்குப் பிறகு மரமே இல்லைன்னா எப்படி இருக்கும்? நல்ல கருத்துள்ள கதை இங்கு தேவதைக்குப் பதில் ரோபோ வருகிறது முதலில் தருவது லேப்- டாப் = குழந்தைகள் இதனுடன் தான் என் அப்பா சதா சர்வகாலமும் இருக்கிறார் வேண்டாம் இது என்று சொல்லி விடுகின்றனர் . அடுத்து வருவது TV = வேண்டாம் இது அம்மா, பாட்டி தாத்கா இதனோடயே இருக்காங்க அடுத்து வருவது விதை = இது என்ன என குழந்தைகள் ஆவலுடன் கேட்க , இதுதான் விதை என அதன் பயன்களை ரோபோ கூற , அதை மகிழ்வுடன் கேட்ட பிறகு இதை வைத்து நாங்கள் காட்டை உருவாக்குவோம், சந்தோஷமாக வெளியில் விளையாடுவோம் எனக் கூறி மற்ற இரண்டையும் வாங்காமல் விதைகளை வாங்கிச் சென்றது குழந்தைகள் என நாடகத்தை முடித்தார்கள். அபாரமான நடிப்பு நாடகத்தை எழுதிய நண்பர் சொன்னார் நான் முதலில் ஏதேதோ செய்து நேரத்தை விரயம் செய்வேன், இப்போது இவர்களுக்காச் சிந்திப்பதில் என் நேரம் பயனுள்ளதாகிறது என்றார். நம்மால் குழந்தைகளும், குழந்தைகளால் நாமும் முன்னேற்றம் அடைகிறோம்.

DSC_7649.JPG
அடுத்து பேசிய எழுத்தாளர் பாவண்ணன் அவர்கள் அருமையான குழந்தை கதை சொன்னார். யானையும் | காகமும்.
இருவருக்கும் இடையில் உள்ள நட்பைப் பற்றி , ஒரு காட்டையும் யானைகளையும், காக்கா கூட்டங்களையும் எங்கள் கண் முன் நிறுத்தினார்.
அடுத்து கதை சொன்ன என் கணவரின் பேச்சும் ரத்தினக் சுருக்கமாக நன்றாக இருந்தது, கற்பனைகளை எல்லாம் இந்த வயதில் விதவிதமாகக் கதைகளைச் சொல்லி மகிழுங்கள், இப்பொழுது நீங்கள் சொல்லும் கதைகளில் எல்லாமே பேசலாம், செடி, கொடி, மரம், கட்டை எதனோடு வேண்டுமானாலும் பேசி மகிழுங்கள், பெரியவர்கள் ஆனால் இந்தச் சுதந்திரம் கிடைக்காது.

DSC_7635.JPGநீ நாலு காலால் நடக்கும் வரை சுதந்திரமா இருக்கலாம், 2 கால்ல நடக்கும் போது உனக்கு ஒரு யூனிபார்ம் போட்டு ஸ்கூல்ல அடைச்சுடுவாங்க, அதனால தான் நான் 4 கால்லயே நடக்கறேன்னு, ஒரு பூனைக்குட்டி குழந்தையிடம் சொல்லியதாம். அருமை.

அடுத்துப் பேசிய மணிகண்டன் அவர்கள் பேச்சும் அவ்வளவு அருமை, வெறும் கதைகளை மட்டும் சொல்லாமல் ஒரு ஊரில் தொடங்கி அடுத்த ஊரில் முடிக்க வேண்டும், தனியாக பொது அறிவு விஷயத்தை படிப்பதை விட இப்படி கதை சொல்லும் போதே அந்த ஊரைப் பற்றி, முக்கியமான இடங்களைப் பற்றி, அந்த ஊரின் முக்கியமான தலைவர்கள் பற்றி சொல்லும் போது குழந்தைகள் மனதில் நன்கு பதியும் என்றார்.மொத்தத்தில் பேசிய அனைவரும் அறிஞர்கள் ஆனால் அவ்வளவு எளிமை, அருமையான மாலைப் பொழுதாக, கற்றுக்கொள்ள அவ்வளவு விஷயங்கள் இருக்கிறது என்பதை உணர்த்தும் விதமாக அமைந்தது. இப்படி ஒரு நல்ல வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த குழுவினருக்கு நன்றி.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s